search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்"

    • முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை நிறுவினால் கிராம மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், நிலம், நிலத்தடி நீர் மற்றும் கால்நடை என அனைத்திற்கும் பாதிப்பு உண்டாகும். மேலும் வேளாண்மை செய்யும் நிலங்கள் மிகவும் மோசமடையும்.

    இப்பகுதியில் ஊராட்சி மன்றத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை தொடர்ந்து வரும் இந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் நிலத்தடி நீருக்கும் சுற்றுச்சூழலுக்கும் உயிர்வேளிகளுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

    இந்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும், மற்ற அமைப்பினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இந்த பிரச்சினை ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் பேசப்பட்டு ஒருமனதாக தொழிற்சாலை அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் பச்சாபாளையம் பகுதியிலும் தார் தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை தடுக்க வேண்டும் என பச்சாம்பாளையம் பகுதி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊராட்சி அனுமதியின்றி நிறுவப்படும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இதுபோன்றே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை ஊர் கவுண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மாரண்டப்பள்ளி கிராமத்தில், ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெறும் கட்டபஞ்சாயத்து சம்பவத்தில் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைப்பு, சமூக நீதி மறுப்பு மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை கண்டித்தும், ஓசூரில் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி ஒருங்கி ணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார்.

    இதில், சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனரும், பொதுச் செயலா ளருமான க. மா, இளவரசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாநில பொருளாளர் முத்துசாமி,மாநில இளைஞர் அணி தலைவர் ஜெகதீஷ், வக்கீல் சண்முகம், இந்திய ஐக்கிய பொதுவுடமை கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் சுந்தரம், செல்வம், சரோஜம்மா உள்பட பலர் பேசினர்.

    பின்னர், ஊர் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி கோவிந்தன் என்ற பெண், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாரண்டபள்ளி கிராமத்தில் வசித்து வந்தோம் கணவர் மறைவுக்கு பிறகு, எனது குழந்தைகளின் மேல் படிப்பிற்காக பெங்களூருக்கு சென்று குடியேறினேன்.

    பின்னர் எனது சொந்த ஊரான இந்த கிராமத்திற்கு வந்த போது, நான் இந்த ஊரில் பிறக்கவில்லை என்று கூறி ஊர் கவுண்டர் தலைமையில் என்னை தள்ளி வைப்பதுடன், எங்கள் உறவினர்களிடமும் பேசக்கூடாது என கூறி ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்துள்ளனர்.

    மேலும் எங்கள் குடும்பத்தில் உள்ள சில பிரச்சனைகளை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பிரச்சினை செய்து வருகின்றனர். மேலும்,, எனக்கு ஆதரவு தெரிவிக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இதுபோன்றே ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து கடைகளில் பொருட்கள் வாங்கவோ அல்லது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை ஊர் கவுண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக பலமுறை காவல் நிலையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் குறை தீர்க்கும் பிரிவுக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த கட்டபஞ்சாயத்தால் தற்போது 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தபட்ட ஊர்கவுண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்படும் நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    ×